Posts

Tree Worship

Image
​ *நிம்ரோது என்பவன் கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனா ​​ யிருந்தான், பாபேல், ஏரேக், அக்தாத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்ஜியத்திற்கு ஆதி ஸ்தானங்கள்* என்று ஆதியாகமம் 10:9,10ல் வாசிக்கிறோம். மனிதனே உலகை ஆளவேண்டும் என்ற நோக்குடன் *வீடுகள், அங்காடிகள், அலுவலகங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கி கூம்பு வடிவ கட்டுமானமாக* அதாவது கோபுரத்தின் உச்சி பகுதி இறைவன் இருக்கும் உயர் ஸ்தானத்தில் அமைய வேண்டும் அந்த உச்சியில் மனிதன் ஆளும் தனது ஆசனத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்குடன் கட்ட ஆரம்பிக்கப்பட்ட கோபுரமே பாபேல் கோபுரம்.  இதைக் கட்டியவன் நிம்ரோது.  ​ மனிதன் இறைவனின் ஸ்தானத்திற்கு முயற்சி செய்யக் கூடாது என்பதை உலகத்தோர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் நிம்ரோதை துண்டு துண்டாக வெட்டி உலகின் எல்லையெங்கிலும் அனுப்பினார்கள் என்றும் இதில் *நிம்ரோதின் உற்பத்தியுறுப்பு மட்டும்* காணாமற்போயிற்று என்பதும் பாபிலோனிய பாரம்பரியம். அவ்வாறு வெட்டப்படும் பொழுது சிதறிய இரத்தம், பாதியாக வெட்டப்பட்டுக் காய்ந்து போயிருந்த மரத்தின் மீது தெளிக்கையில் மரம் மறுஉயிர் அடைந்து தளிர்...